துப்பாக்கி சுடும் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த மாணவன் முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 April 2023

துப்பாக்கி சுடும் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்த மாணவன் முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நடேசன் அவர்களின் மகன் சந்துரு இவர் திருப்பூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை முயற்சியில் சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கோவாவில்  நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார். 


வெற்றி பெற்ற மாணவர் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் பாராற்றுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து பெற்றார்.மேலும் இவருக்கு பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள தமிழக அரசோ அல்லது தொண்டு நிறுவனமோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சாதனை படைத்த மாணவர் சந்துரு கூறினார். 


உலக அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் சந்துருவிற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


- எடப்பாடி செய்தியாளர் லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad