தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கும் நபர்கள். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 April 2023

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கும் நபர்கள்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அடுத்த முனியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர்  மூன்று தலைமுறையாக தங்களுக்கு சொந்தமாக  உள்ள 8 சென்ட் இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிண்ணப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்ற நபர் போலியான ஆவணம் தயாரித்து இவரது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நாள்தோறும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தாக்குதல்களை செந்தில்குமார் குடும்பத்தினருக்கு தர்மலிங்கம் ஆதரவாளர்கள் தொடுத்து வந்துள்ளனர்.

மேலும் போலியான ஆவணம் தயாரித்த குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கினர் அந்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.


செந்தில் குமார் வந்து பார்த்தபொழுது வீடு முழுவதும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனை எடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் தர்மலிங்கம் என்பவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர் எனவே என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி போலியான ஆவணம் தயாரித்து இந்த நிலத்தை அபகரித்து மிரட்டி வருகிறார்.


எனவே தமிழக அரசு எங்கள் குடும்பத்திற்கு ஊறிய பாதுகாப்பை வழங்கி நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் எங்களின் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார்.

 

- எடப்பாடி செய்தியாளர் லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad