சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு தென்னை பண்ணையில் நெட்டை, குட்டை ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 500 நாற்றுகள் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து பணி நடந்து வருகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் டேனிஷ்பேட்டை பண்ணையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு இரு நாளாக, 11 ஆயிரத்து, 650 தென்னை நாற்றுகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது நடப்பாண்டு தென்னை உற்பத்திக்கு, மணல் பதியம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
No comments:
Post a Comment