மேட்டூர் அருகே காப்பரத்தாம்பட்டி ஸ்ரீ பச்சமலையாளன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 April 2023

மேட்டூர் அருகே காப்பரத்தாம்பட்டி ஸ்ரீ பச்சமலையாளன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விமர்சையாக நடைபெற்றது.


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தோரமங்கலம் கிராமம் காப்பரத்தாம்பட்டி ஸ்ரீ பச்சமலையாளன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.  


முன்னதாக கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கு தேவையான புனித நீரை காவிரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பசு குதிரை முன்வர மேளதாளங்கள் மற்றும் பாம்பை மங்கள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையோடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க இன்று பச்சமலையாளன் கோவில் பங்காளிகள் மூலம் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கட்டப்பட்ட புதிய ஆலயத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை யடுத்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 


தீர்த்தவாரி நிகழ்வு பரிவார தெய்வ நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா காவல்துறையினரின் பாதுகாப்போடு வெகு சிறப்பாக நடைபெற்றது.- எடப்பாடி லிங்கானந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad