சங்ககிரி அருகே தனி நபர் நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 May 2023

சங்ககிரி அருகே தனி நபர் நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கூடலூர் கிராமம் குன்னிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட கவுண்டர் இவருக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அபகரித்துக் கொண்டு வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் இது குறித்து செங்கோட கவுண்டர் வகையறாக்கள் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ராஜ்குமார் என்பவர் நிலத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.


இதுகுறித்து நீதிமன்றத்தில் இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த இடத்தை யாரும் வாங்க கூடாது விற்கவும் கூடாது என அறிவிப்பானை செங்கோட கவுண்டர் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது இது குறித்த தகவல் அறிந்த ராஜ்குமார் என்பவர் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரிந்து விட்டு அதற்கு காரணமான செங்கோட கவுண்டர் மகள் சாரதா வை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 
இதனால் உயிருக்கு பயந்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சாரதா, சாரதாவின் தந்தை செங்கோட கவுண்டர், சாரதாவின் மகள் சிந்து ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்த ராஜ்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து காவல் நிலையம் முன்பு காத்திருப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


கணவரை இழந்த சாரதா தந்தை மகளுடன் ராத்திரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலும் கூட காவல் துறை உயர் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது சுற்றுவட்டார பகுதி மக்களுடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad