சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை மதுக்கடையில் மது வாங்கி அருகில் இருந்த பாரில் அருந்திய போது சம்பவ இடத்திலேயே சேகர் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி மாலை 4 மணி அளவில் உயிர் இழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கணவரை இழந்து விட்டு நானும் எனது மூன்று வயது குழந்தையும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அதற்கு அரசு மது கடையில் மதுபானம் அருந்தி இறந்த சேகரின் குடும்பத்திற்கு அரசு வேலையோ அல்லது நிவாரண உதவியோ வழங்க வேண்டும் என்று கணவரை இழந்த மனைவி நித்தியா அவரது மூன்று வயது குழந்தை பிரதிக்ஷா மற்றும் அவரது உறவினர்கள் இன்று எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதற்கு அரசு ஊழிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை.
- மாவட்ட செய்தியாளர் லிங்கானநாத்
No comments:
Post a Comment