சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ராஜராஜேஸ்வரி அம்பாள் உடனமர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரருக்கு நேற்று பிரதோஷம் சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு அலங்காரம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் முதலில் நந்தி பகவானே வணங்கிவிட்டு நந்திக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..
No comments:
Post a Comment