தாரமங்கலத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை திறந்து வைத்தார் T.M செல்வகணபதி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 September 2023

தாரமங்கலத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை திறந்து வைத்தார் T.M செல்வகணபதி.


சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக மாபெரும்  இலவச மருத்துவ முகாம் “கலைஞரின் கண்ணொளி திட்டம்” “நமக்கு நாமே வருமுன் காப்போம் திட்டம்” மருத்துவ முகாமை தலைமை ஏற்றி துவக்கி வைத்தார் சேலம் மேற்கு மாவட்ட திமுக  செயலாளர்  T.M செல்வகணபதி.

செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவ வாகனத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், இதன் மூலம் கண்டறியப்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது,  மற்றும் தீர்க்க முடியாத நோய்களுக்கு சென்னை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் முகாம் ஏற்பட்டார்கள் தெரிவித்தார்கள். 


இந்த முகாமில் இருதய, புற்றுநோய், குழந்தைகள்  பெண்கள் மகப்பேறு, மார்பு மற்றும் காசநோய் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது, மேலும் R.பாலகிருஷ்ணன், T.M.S.குணசேகரன், நகர மன்ற தலைவர்., R.கோகுல் தினேஷ் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்,  இந்த முகாமின் மூலம் தாரமங்கலம்  சுற்று வட்டார பகுதி பொதுமக்கள்  பயன் பெற்றனர். 


- சேலம் செய்தியாளர் வெங்கடேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad