இந்த ஆண்டு பயின்ற மாணவ மாணவிகளின் குழுவை “துளசி கிங்ஃபிஷர்” என்ற பெயர் சூட்டு விழாவும் நடைபெற்றது.இந்த ஆண்டு ““வெள்ளி விழா” ஆண்டாக கொண்டாடப்பட்டது.முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது தலைமை ஆசிரியரும் ஆசிரியரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் கணித ஆசிரியர் கணேஷ், அறிவியல் ஆசிரியர் கற்பகம், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆசிரியர்களிடம் பயின்ற மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த நபர்களாக ஒவ்வொரு பதவியிலும் பணியாற்றுவதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.பள்ளி முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களது நினைவுகளை கூறி மகிழ்ந்த வண்ணம் பள்ளியை சுற்றி வந்தனர். அவர்கள் பயின்ற வகுப்பறைகளையும் கட்டிடங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
- சேலம் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment