தொளசம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் அசத்தல்.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

தொளசம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் அசத்தல்..


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தல், ஓமலூர் வட்டார அளவில் நடைபெற்ற கபடி, இறகுமந்து, பால் பேட்மிட்டன், தடகளப்போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம், போன்ற இடத்தை பிடித்த விளையாட்டு போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்று பரிசுகளையும் சான்றுகளையும் பெற்றுள்ளார்கள்.

முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும்  போட்டிக்கு கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்கள் இந்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி சான்றுகளையும் பரிசுகளையும் வழங்கினார்கள்.. 


- சேலம் செய்தியாளர் S. வெங்கடேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad