சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு புரட்டாசி மாத நான்காவது வார சனிக்கிழமை அமாவாசையொட்டி இன்று பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமாக பால்,தயிர், பன்னீர்,சந்தனம் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
புரட்டாசி மாத சனிக்கிழமை அமாவாசையொட்டி திரளான பக்தர்கள் தேங்காய் பழ தட்டையுடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சேலம் செய்தியாளர்
S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment