சேலம் மாவட்டத்தில் உள்ள செங்குந்த மாணவ மாணவிகள் 10,11,12 ஆம் வகுப்பில் அரசு பொது தேர்வு மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மற்றும் தனிப்பாடத்தில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடங்க சேலம் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக ஊக்கப் பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இன்று சேலம் அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் கல்வி உதவி தொகையை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டனர்.இதில் சேலம் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..
- சேலம் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment