சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சின்னப்பம்பட்டி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதருக்கு கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று தீர்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குதிரை, காளை, ஒட்டகம் மற்றும் மேளதாளங்களுடன் தீர்த்தக்கடன் ஊர்வலமாக ஊரை சுற்றி வந்த கோவிலுக்கு சென்றடைந்தன பின்னர், நேற்று இரவு யாகசாலையில் யாகம் நடைபெற்றது. இன்று காலை கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புனித தீர்த்தங்களை கலசங்களில் ஏற்றி பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
- செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment