சேலம் மாவட்டம் மலைக்குறவன் பழங்குடியினர் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் 28.10.23 அன்று மாவட்ட துணை தலைவர் செந்தில் குமார் தலைமையில் துலுக்கானூரில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்புரை ஆற்றினார், இக்கூட்டத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி டில்லிபாபு, வாச்சாத்தி வழக்கில் நீதிக்காக போராடி வெற்றி பெற்றது குறித்தும் சென்ற மாதம் நாமக்கல்லில் அகில இந்திய ஆதிவாசிகள் மாநாட்டின் முடிவுகள் குறித்து பேசினார், மலைக்குறவன் மக்கள் சேலம் மாவட்டம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு தடையின்றி இனச்சான்று பெற்று தர மாவட்ட நிர்வாகிகள் பணி செய்ய வேண்டும், மாநில அளவிலான அமைப்பாக செயல்படுவதற்கு புதிய மாவட்டங்களில் சங்கத்தை விஸ்தரிக்க வேண்டும். மேலும் மாவட்ட மாநாடு பேரணி நடத்திட ஆத்தூரில் வருகின்ற நவம்பர் 15ம்தேதி அன்று மாவட்ட பேரவை கூட்டத்தில் பேசி முடிவெடுக்க திட்டமிடப்பட்டது, இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மலைக்குறவன்மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment