சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஸ்ரீ லட்சுமி நாராயண திருக்கோவிலில் வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்து ஆசிர்வாதம் செய்தார் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்பாக்கி கிருஷ்ணன்,ரவி மாரியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், தலைவர் சுமதி வேலு, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment