தாரமங்கலம் சுற்றி வட்டார பகுதியில் செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி இணைப்பு துண்டிப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

தாரமங்கலம் சுற்றி வட்டார பகுதியில் செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி இணைப்பு துண்டிப்பு.


சேலம் மாவட்டம்  தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று மதியம் வரை செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி இணைப்பு கிடைக்கவில்லை அதனால் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள், செய்திகள், சீரியல்கள் பார்க்க முடியாமல் வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்ப இல்லத்தரசிகள் தவித்தனர். 

இணைப்பு எப்போது சீரமைக்கப்படும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி   இணைப்பு துண்டிக்கப்படுவதற்கான காரணம் குறித்த செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி  ஆபரேட்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.பின்னர் காலையில் இணைப்பு துண்டிப்பதற்கான காரணம் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டுள்ளது. STB மென்பொருள் சிதைந்துள்ளது என்று தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. இதன் காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 


உள்ளூர் செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி  ஆபரேட்டரை தொடர்பு கொண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடர்பாக வாடிக்கையாளர் கேட்டதற்கு சென்னை தலைமை அலுவலகத்தில் சரி செய்து வருகின்றன விரைவில் இணைப்பு சரியாகும் என கூறினார். பிறகு மாலை 6:00 மணிக்கு மேல்  செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி இணைப்பு சரியாகி விட்டது. இதனால் வாடிக்கையாளர் மற்றும் குடும்ப இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செட் ஆப் பாக்ஸ் கேபிள் டிவி வழக்கம்போல் இயங்கியது.


- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad