சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானத்தால் நல்ல கவுண்டம்பட்டியில் சிறுத்தையை பார்த்ததாக மணி என்பவன் மனைவி சின்ன பொண்ணு சில தினங்களுக்கு முன்பு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார் இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வலை வீசி தேடி வந்தனர்.இந்த நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் சாத்தப்பாடி அருகே உள்ள எம்.என்.பட்டி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அஞ்சிய கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அந்த இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மாலை 6:00 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்தார்கள்.
வயல்களில் சிறுத்தையின் காலடி தடங்கள் மற்றும் மிருகங்களின் எச்சங்கள் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்கள் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
- தமிழக குரல் செய்தியாளர் S. வெங்கடேஷ்.
No comments:
Post a Comment