சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 16.11.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிக்கை வெளியாகி இருந்தது. இதன்படி சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் காலை 9:00 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
பின்பு 5:00 மணிக்கு மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பிறகு 6:21 மணிக்கு தான் மின்சாரம் வந்தது இந்த தாமதத்தின் காரணமாக மக்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகின்ற மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். இதனால் அப்பகுதி மக்கள் 9:00 மணிக்கு நிறுத்துகின்ற மின்விநியோகம் பின்பு அறிக்கையில் கூறியது போல் 5:00 மணிக்கு மின்விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது..
- தமிழக குரல் செய்தியாளர் S. வெங்கடேஷ்
No comments:
Post a Comment