சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் எழுந்தாளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.கடந்த நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு கந்த சஷ்டி திருவிழா நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆறாம் நாள் நிகழ்ச்சியான இன்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்..
- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment