சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த ஐந்து நாட்களாக பணமில்லாததால் தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி.ஐ தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ஏதேனும் இயந்திர கோளாறாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் இதைப் பற்றி கிளை வங்கியை தொடர்பு கொண்டு கேட்குமாறு கூறினார்கள்.
இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் இதை சரி செய்து உடனடியாக இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment