சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் நேற்று மார்கழி மாதம் முதல் நாள் பஜனை தொடங்கியது இதனை தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களும் பஜனை வெகு சிறப்பான முறையில் நடைபெறும். 30 நாட்களும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து கடவுளை தரிசித்தால் நினைத்த காரியங்கள் மற்றும் தொழில், கல்வி சிறப்பாக அமையும் என்பது பஜனை குழு நண்பர்களின் ஒரு ஐதீகமாக இருந்து வருகிறது.
பொதுவாக மார்கழி மாதம் கடவுளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் பஜனியில் பெரியார்கள் முதல் சிறியவர்கள் வரை அதிகாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை தொளசம்பட்டியில் உள்ள அனைத்து கடவுளையும் தரிசித்து திருப்பாவை திருவெம்பாவை பாடல்களைப் பாடி ஊர் முழுவதும் சுற்றி வருவார்கள். சுமார் 55 வருடங்களாக பஜனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொதுமக்கள் தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி அன்பளிப்பாக வழங்குவார்கள்.
- தமிழக குரல் செய்தியாளர் S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment