திமுக இளைஞரணி மாநாடு உலக சாதனை படைக்கும். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 January 2024

திமுக இளைஞரணி மாநாடு உலக சாதனை படைக்கும்.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் (இன்று) மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையத்திற்கும், 6 மணிக்கு மாநாடு பந்தல் அமைந்துள்ள இடத்திற்கும் வருகிறார். பின்னர் மாநாட்டில் சுடரை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக சுற்றுப்பயணம் சென்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மாநாட்டிற்கு வருகை தரவுள்ளது. 


மேலும் 1000 டிரோன் கண்காட்சி நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கிறது. இவற்றை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிடுகிறார்.21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாநாட்டு திடலில் தி. மு. க. கட்சி கொடி ஏற்றப்படுகிறது. 9.15 மணிக்கு மாநாடு தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். பின்னர் உதயநிதிஸ்டாலின், மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad