இந்தநிலையில் விக்னேஷ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து கோமதியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதுகுறித்து கோமதி கனது தாயார்ரமணியிடம் போனில் அடிக்கடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கோமதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோமதியின் பெற்றோர், உறவினர்கள் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் மகள் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment