தாரமங்கலம் கைலாசநாதர் ஆலய தேர் நிலை சேர்ந்தது. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

தாரமங்கலம் கைலாசநாதர் ஆலய தேர் நிலை சேர்ந்தது.


சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர் ஆலயத்தில் தைப்பூசத் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 64 கிராமங்களை சேர்த்த அயிரகணக்க மக்கள் கலந்துகொண்டு சாமியை தரிசித்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதில் முதல் நாள் நிகழ்வாக, தேர் நிலையத்தில் இருந்து சின்ன தேர், பெரிய தேர் என இரண்டு தேரும் அண்ணாசிலையை வந்தடைந்தது.இரண்டாம் நாள் அண்ணா சிலையில் இருந்தது பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. மூன்றாம் நாளான இன்று தேர் காலையிலும், மாலையிலும் இழுக்கப்பட்டது பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு நிலையத்திற்கு வந்தடைந்து தேர் நிலை  சேர்ந்தது. இரண்டு நாட்களை விட இன்று மக்கள் கூட்டம் அலை மோதியது.


கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர் திருவிழா சாமிக்கு எட்டு நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து திருகல்யாண வைப்போம் நடைபெறு. இந்த தேர் திருவிழா மூன்று நாள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இடுபட்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad