தொளசம்பட்டி நாகர் பண்டிகை முன்னேற்பட்ட நிகழ்ச்சி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 31 January 2024

தொளசம்பட்டி நாகர் பண்டிகை முன்னேற்பட்ட நிகழ்ச்சி.

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகர்சாமி மற்றும் முத்துக்குமாரசுவாமி திருவிழா வருடம் தோறும் தை மாதம் வெகு சிறப்பான முறையில் நடைப்பெறும். இதனை முன்னிட்டு இந்த வருடமும் நாகர்சாமி மற்றும் முத்துக்குமாரசுவாமி பண்டிகை வருகின்ற தை மாதம் 23 ஆம் நாள் (06/02/24) செவ்வாய்க்கிழமை முதல் (09/02/24) வெள்ளிக்கிழமை வரை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது.இன்று மாலை பூசாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நாகர்சுவாமி பூங்கரகத்துடன் முத்துக்குமாரசுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் நவவீரர் படைக்காலத்துடன் ஊர்வலம் நடைபெறும்.மதியம் 1:00 மணி அளவில் நாகர்சுவாமி கோவிலில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும் 7:00 மணி அளவில் தேர் தொடரில் அமைந்துள்ள அலங்கார மேடையில் சிவகிரி செங்குந்தர் பாரதி குழுவின் வெள்ளி கும்மியாட்டம் நடைபெறும் 9:00 மணி அளவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப மகமேரில் சாமி ஊர்வலம் வரும், சமயம் கேசவன் குழுவினர் சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும்  9:00  மணி அளவில்  கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெறும் இதனை தொடர்ந்து எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் வருகின்ற வியாழக்கிழமை மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி மாலை பூந்தேர் ஊர்வலம் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும் வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவில் நடைபெறும். 


இந்தப் பண்டிகையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பாதுகாப்பு பணியிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad