சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 February 2024

சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


வாரணாசியில் உள்ள கியான் வாபி பள்ளிவாசலின் கீழ் தளத்தில் பூஜை செய்து கொள்ள சங்க பரிவார சக்திகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு இஸ்லாமியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாபர் மசூதியையும் இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி தான் இஸ்லாமிய தரப்பிடமிருந்து பதித்தனர் அடுத்து காசி மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை படிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் சங்க பரிவார சக்திகள் முன்னெடுத்து வருகின்றனர்.

1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடு சுதந்திரம் பெறும்போது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது ஆனால் அதற்கு மாற்றான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, ஜனநாயகமும் சட்ட நெறிமுறைகளுக்கும் குழி தோண்டி புதைக்கப்படும்  இக்கால கட்டத்தில் ஜனநாயக ரீதியாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் அனைத்து மதங்களின் வழிபாட்டு தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம், 10 ரெண்டு 2024 சேலம் கோட்டை மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காஜா தலைமை தாங்கினார். சீனி இம்ரான் மாநில செயலாளர் கலந்துகொண்டு பேரணியின் நோக்கம் குறித்தும் ஆளும் ஒன்றிய அரசு இப் பிரச்சினைகளை இந்நேரத்தில் கையில் எடுப்பதன் பின்னணி குறித்தும் பேசினார்கள் சேலம் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஆயிரக்கணக்கான ஒருவன் எழுச்சியோடு கலந்து கொண்ட இந்த பேரணி மாவட்ட பொருளாளர் பாதுஷா நன்றி உரையுடன் நிறைவுறையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad