சேலத்தில் ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு! தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 February 2024

சேலத்தில் ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு! தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை!.


மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும் கோவை ஈஷா யோகா மையத்தில் மார்ச் எட்டாம் தேதி நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிகப்பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி தென் கபிலாய பக்தி பேரவை சார்பில் மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டு தோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதோடு சிவ யாத்திரி என்னும் பாத யாத்திரியையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய ஏழு தேர்தலில் எடுத்தபடி மொத்தம் ஏழு குழுக்களாக வருகின்றனர். இந்த பிப்ரவரி 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.


மேலும் கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி நடக்கும் அதே வேளையில் மற்ற ஊர் மக்களுக்கும் பயன் பெரும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹா சிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்கபைரவி கோவிலில் வரும் மார்ச் எட்டாம் தேதி மாலை 6:00 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை ஈஷா மஹா சிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. 


இதே போலவே தர்மபுரியில் பாரதி புறம் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரை பாய் திருமண மண்டபத்திலும் ஓசூரில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளத என்று செய்தியாளர்களுக்கு சீனிவாசன், பாலாஜி பேட்டி அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad