தொளசம்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 11 February 2024

தொளசம்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா.


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று சனிக்கிழமை ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் அனைத்து ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும், பெற்றோர் கழகத் தலைவர்களும் நிர்வாகிகளும், பள்ளியில் பயிலும் மாணவன் மாணவிகளின் பெற்றோர்களும் , சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும் ஆர்வத்துடன் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக ஒரு வாரமாக மாணவ மாணவிகள் பயிற்சி எடுக்கப்பட்டு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பாடல், நடனம், நாடகம், பட்டிமன்றம், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் அவர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்தினர் இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத்திறனையும் கலைகளையும் மேம்படுத்த உதவுகிறது. 


நேற்று ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்தினர் இதனை பாராட்டி தலைமை ஆசிரியர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad