சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அப்ரமேய பெருமாள் ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மேளதாளங்களுடன் தேங்காய் பழ தட்டையுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்ற நிகழ்சியில் கலந்து கொண்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (11/02/24) கொடியேற்றி வைத்து மூன்று நாட்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும். திங்கட்கிழமை கிருஷ்ணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். செவ்வாய்க்கிழமை மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.வியாழக்கிழமை (15/02/24) முதல் சனிக்கிழமை(17/02/24) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
No comments:
Post a Comment