தாரமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஏலம். - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 February 2024

தாரமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஏலம்.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான பைக் ஸ்டண்ட், பேருந்து நிலையம் சுங்க கட்டணம், அரிய புத்திரன் பூங்கா, பேருந்து நிலைய ஒலிபெருக்கி, புளியமர மகசூல் போன்றவை ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

நேற்று வியாழக்கிழமை நகராட்சிக்கு சொந்தமான இடம் குத்தகை எடுப்பதற்கு முன்பு டெபாசிட் பணம் வங்கி வரை ஓலையில் கொடுத்து ஏலம் ஒப்பந்த புள்ளியில் கலந்து கொள்ள வேண்டும். வங்கி வரைவோலை உள்ளவர்கள் மட்டுமே போது ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். பைக் ஸ்டாண்டுக்கு டெபாசிட் பணம் 50,000 அரியபுத்திரன் பூங்கா டெபாசிட் பணம் 10,000 பேருந்து நிலைய ஒலிபெருக்கி டெபாசிட் பணம் 5,000 மற்றும் புளியமரமகசூல் டெபாசிட் பணம் 5,000 போன்றவற்றிற்கு முன்பணம் செலுத்த வேண்டும்.


இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் பைக் ஸ்டாண்ட் பேருந்து நிலைய ஒளிபெருக்கி மற்றும் அரிய புத்திரன் பூங்கா போன்றவை ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் டெபாசிட் செய்து கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான பைக் ஸ்டாண்ட் தாரமங்கலத்தில் வசித்து வரும் லதா ஆனந்த் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad