சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற மிக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அப்ரமேய பெருமாள் ஆலயத்தில் அப்ரமேய பெருமாள் தேர் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
திங்கட்கிழமை அப்ரமேய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் கிருஷ்ண அலங்காரத்திலும் செவ்வாய்க்கிழமை மோகினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.இன்று புதன்கிழமை சுபமுகூர்த்த தினத்தில் அப்ரமேய பெருமாளுக்கும் துளசிஅலமேல் மங்கைக்கும் காலை முதல் சிறப்பு பூஜை செய்யப்பட்டு இரவு சரியாக 10:00 மணி அளவில் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான பொதுமக்கள் அப்ரமேய பெருமாளுக்கும் துளசி அலமேலு மங்கை திருக்கல்யாண வைபவத்தை கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.நாளை காலை பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment