சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அப்ரமேய பெருமாள் ஆலயத்தில் இன்று மாலை 5:00 மணி அளவில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேர் திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, புதன்கிழமை திருக்கல்யாணம் வைபோகம் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர் தேர் அப்ரமேய பெருமாள் கோவிலில், அயர் தெருவுக்கு, பேருந்து நிலையம் வந்தடைந்தது இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேர் திருவிழா நடைபெறும்.
No comments:
Post a Comment