ஞாயிற்றுக்கிழமை (11/02/24) கொடியேற்றி வைத்து மூன்று நாட்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியான திங்கட்கிழமை கிருஷ்ணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியான செவ்வாய்க்கிழமை மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
வியாழக்கிழமை (15/02/24) முதல் சனிக்கிழமை (17/02/24) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வியாழக்கிழமை முதல் நாள் தேர் திருவிழாவில் திரளான பக்த கோடிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து ஐயர் தெருவில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் தேரை வடம் பிடித்து இழுத்து தொளசம்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது இதனை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று வழக்கத்தைவிட தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள எட்டு பட்டியைச் சேர்ந்த திரளான பக்த கோடிகள் மற்றும் பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாள் தேர் திருவிழாவில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தினார்கள். சாமியை தேரில் இருந்து எடுக்கப்பட்ட கோவிலில் வைக்கப்பட்டது. மூன்றாம் நாள் தேர் திருவிழாவில் சிலம்பாட்ட நிகழ்ச்சி மற்றும் கூத்தாட்டம் என எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment