தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு 21/02/24 புதன்கிழமை முதல் 27/02/24 செவ்வாய்க்கிழமை வரை மனக்காடு கிராமத்தில் நடைபெறும். பேராசிரியர் செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் சுரும்பார்குழலி போன்ற ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. நாட்டு நல பணி திட்டத்தில் ஈடுபடும் சுமார் 200 மாணவ மாணவிகளுக்கு தினம்தோறும் இடைவெளி நேரம் மற்றும் மதிய உணவு இடைவெளி நேரத்தில் மாணவர்களுக்கு வேண்டிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மக்களிடையே கண் பரிசோதனை முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகாம் நடத்தப்பட்டது.
இது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர் தொடர்ந்து செயின்ட் ஜோசப் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். கல்லுாரி மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்து சமூகப்பணியாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment