சேலம் அரசு கலைக் கல்லூரி தன்னாட்சியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோன்று இந்த வருடமும் இன்று ஆங்கில துறை சார்பாக ஆங்கில இலக்கிய சங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் கங்காதரன் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாணவ மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி கோலம் போட்டி, நாட்டியம், நடனம் போன்ற எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment