தமிழ்நாடு முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் 11ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்பட்டது அதில் முதல் தேர்வாக தமிழ் தேர்வு மாணவர்கள் எழுதினார்கள்.மாணவர்கள் வட்டாரத்தில் மிகவும் கடினமான தேர்வுகளாக தமிழ் உள்ளது என்று கூறினார்கள். வினாத்தாளில் 47 அ, ஆ கட்டாய வினாவாக 6 மதிப்பெண்களுக்கு ஒரு மனப்பாடப் பாடலும்,ஒரு திருக்குறளும் கேட்கப்படும் இதில் இந்த முறை, 47. ஆ திருக்குறள் உலகு என முடியும் குரல் கேட்கப்பட்டுள்ளது, உலகு என முடியும் திருக்குறள் புத்தகத்தில் இல்லை. மாணவர்கள் உலகு என்று கேட்டவுடன் பல மாணவர்கள் குழப்பத்தில் எழுதாமல் வந்து விட்டார்கள்.
சில மாணவர்கள் நெருநல் உளன் ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்ற புத்தகத்தில் உள்ள திருக்குறளை எழுதி வந்துள்ளார்கள் சில மாணவர்கள் எழுதி வந்துள்ளார்கள் பல மாணவர்கள், வினா என்னை போட்டு விட்டு குழப்பத்தில் வேர் திருக்குறள் அல்லது எழுதாமல் வந்துள்ளார்கள் இதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை இதற்கு 2மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது இதுவரை இதை எந்த ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் இந்த கோரிக்கையை முன் வைக்கவில்லை.
இதை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment