சேலம் மாவட்டம்,சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் P.விக்னேஷ் தீவிரவாக் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எருமபாளையம் பகுதியில் உள்ள தேநீர் கடையாக்கு சென்று பொதுமக்களுக்கு தேநீர் போட்டு கொடுத்து வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
ஜாதி மதம் இனம் இவற்றிற்கு அப்பாற்பட்டு எம்மதமும் சம்மதமும் என்று ஒருங்கிணைந்த கட்சி தான் நம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறி வாக்குகள் சேகரித்தனர். திமுக அரசால் நிறைவேற்றாத வாக்குறுதிகளை வலியுறுத்தியும், அதிமுக உடைய வாக்குறுதிகளை கூறியும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, வாக்குகளை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தேமுதிகவை இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் P.விக்னேஷ் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்..
No comments:
Post a Comment