தொளசம்பட்டியில் பேருந்துக்காக காத்திருந்து, காத்திருந்து பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 April 2024

தொளசம்பட்டியில் பேருந்துக்காக காத்திருந்து, காத்திருந்து பொதுமக்கள் அவதி.


சேலம் மாவட்டம் தொளசம்பட்டியைச் சார்ந்த பொதுமக்கள் வெளியூருக்கு செல்வதற்கு,சென்று திரும்புவதற்கு சரியான நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் தினம் தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் தொழிலுக்காக சொல்வார்கள் என பல பொதுமக்கள் அவசிய தேவைக்காக பேருந்தில் பயணம் செய்வது அவசியமான ஒன்றாக உள்ளது இருந்த போதிலும் தாரமங்கலம் to தொளசம்பட்டி சரியான நேரத்தில் பேருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது தாரமங்கலத்தில் மாலை 5:15 மணிக்கு உள்ள 11E பேருந்துக்கு அடுத்ததாக மாலை 6:30 மணிக்கு 16 பேருந்து மட்டுமே உள்ளது 5 மணி முதல் 6:00 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் நேரம் ஆகும்.

இந்த நேரத்தில் சுமார் 1/4 மணி நேரத்திற்கு பேருந்து இல்லாததால் தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டியை நோக்கி வரும் 16 பேருந்தில் தினமும் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றுக் கொள்வது வழக்கமாக உள்ளது இதனால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதை தடுக்க சேலம் மாவட்ட போக்குவரத்து துறை உடனடியாக 5:15 பிறகு இடையில் தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டிக்கு ஒரு பேருந்து விட்டால் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது இதை உடனடியாக சேலம் மாவட்ட போக்குவரத்து துறை பேருந்துகளை காலதாமதம் இன்றியும் அதிக பேருந்துகளையும் இயக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad