சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கொங்கு பேரவையின் மாநிலச் செயலாளரும் ஓமலூர் தாலுக்கா வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான P.S.சுந்தர்ராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பூ கொத்து கொடுத்து அதிமுகவில் இணைந்தனர்.
வழக்கறிஞர் சுந்தர்ராஜன் இரண்டு முறை ஓமலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஜனதா கட்சியில் நின்று மூன்றாவது இடத்தை பிடித்தவர்.ஜனதா கட்சியில் 1992 முதல் 2008 வரை இருந்தார் பிறகு கொங்கு இளைஞர் பேரவையில் இருந்தார்.லோட்ரி கிளப் தலைவராக இருந்துள்ளார் மக்களுக்காக எண்ணற்ற சேவைகளை செய்து வரும் சிறப்புமிக்க நபர். தற்போது கொங்கு பேரவையின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். உடன் வழக்கறிஞர் செந்தில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் R.மணி, எஸ் எஸ் கே ராஜேந்திரன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment