அப்போது அவர் என் உயிரையும் வேணும்னாலும் கொடுப்பேன் கட்சி மாறுகின்ற வேலையை செய்ய மாட்டேன் என்று நான் சொன்னேன். திராவிட நாடு கிடைக்கும் என்று அண்ணாவை நம்பி வந்தேன் என்றும் என் கட்சி திமுக என் தலைவன் கலைஞர் என்று துரைமுருகன் பேசினார். செல்வகணபதி ஆற்றல்மிக்க பேச்சாளர் பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதியுடையார் பாராளுமன்றத்துக்கு போக வேண்டுமானால் சில குவாலிபிகேஷன் தேவை. பாடத் தெரிந்தவன் தான் கச்சேரிக்கு வரவேண்டும் ஆட தெரிந்தவன் தான் மேடைக்கு வர வேண்டும் குத்துச்சண்டை தெரிந்தவன் தான் மைதானத்திற்கு போக வேண்டும், தமிழ் அல்ல ஆங்கிலம் ஹிந்தி இந்த ரெண்டு மொழி தெரிந்தவன் தான் பார்லிமென்ட்க்கு போக வேண்டும் இரண்டும் தெரியாவிட்டால் மற்ற மொழி தெரிந்தால் அங்கு எடுபடாது இரண்டும் தெரியாதவன் போன நின்று மற்றவன் பேசுவதை பார்த்து உயரமா அந்த கட்டிடத்தை பார்த்து என்னடா டேய் ஒண்ணுமே புரியலையே சாப்பிட போலாமா என்று வரவேண்டி தான் என்றார் துரைமுருகன்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இந்திய கூட்டணி சார்பாக சேலம் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி எம் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
No comments:
Post a Comment