10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு மாணவர்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 8 April 2024

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு மாணவர்கள் மகிழ்ச்சி.


தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி இன்றோடு நிறைவடைந்தது. சேலம் மாவட்டம் தொளசமப்ட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக கூறுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு நடைபெற்ற தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அறிவியல் கடினமாக இருந்ததாகவும் சமூக அறிவியல் எளிமையாக இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆங்கிலம் தேர்வு 18 கேள்வி தவறாக உள்ளது பிரான்ஸ் என்பதற்கு பதிலாக பிராங்க் பிழையாக உள்ளது இதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று தமிழ் தேர்விலும் 33 கேள்வி பிழையாக கேட்கப்பட்டுள்ளது இதற்கும் 3 கருணை மதிப்பெண் வழங்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவ, மாணவிகள் தேர்வு முடிந்த சந்தோசத்திலும், அடுத்த வகுப்பிற்கு செல்லும் மகிழ்ச்சியிலும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்..

No comments:

Post a Comment

Post Top Ad