சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 April 2024

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.


சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசுகையில் இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான் ஆனால் ஒரு ரூபாய் நாம் வரி செலுத்தினால் 29 பைசா மட்டுமே மோடி நமக்கு தருகிறார் மீதி 71 பைசாவை அவர் வேண்டிய மாநிலங்களுக்கு கொடுக்கிறார் உத்திர பிரதேசம்த்தில் ஒரு ரூபாய் அவர்கள் வரி செலுத்தினால் அவருக்கு மூன்று ரூபாய் கொடுக்கிறார். 

பிகார் அவருடைய ஆட்சி நடக்கிற இடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழு ரூபாய்க்கு கொடுக்கிறார் அதனால்தான் மோடி ஆட்சி போக வேண்டும் என்று கூறுகிறேன். தொளசம்பட்டி பகுதி மக்கள் அதிகம் சூளைத் தொழிலே நம்பி இருக்கிறார்கள் இவர்களுக்கு தேவையான மண் முதலான மூலப் பொருட்கள் கிடைப்பதில்லை இதற்கு சட்டத்தில் இடம் உண்டு சட்ட படி போராடி பெற்று தருவேன் என்று கூறுகிறார். தடம் எண் 98, 70 பேருந்துகள் சந்தையில் நிற்பதில்லை இதற்கு கண்டிப்பாக பேசி உங்களுக்கு ஏதுவாக சந்தை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வைப்பேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை கூறியும் திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியும் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad