சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் நாளை 11.04.2024 வியாழக்கிழமை ஓமலூர் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் வடக்கு வடக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிக்க உள்ளார். பெரமச்சூர், முத்துநாயக்கன்பட்டி, குட்டப்பட்டி, செங்கனூர், மேட்டுக்கடை, காளியம்மன்கோவில், சடையமாரியம்மன் கோவில் பழையூர் சத்திரம் மாங்கோப்பை பெரிய மாரியம்மன் கோவில் சாமி, டால்மியா போர்டு சீனிவாசன் நகர், எஸ்எஸ்கேஆர் திருமண மண்டபம் தொளசம்பட்டி ரெட்டிபட்டி கும்பட்டி காளிப்பட்டி கோவில், பூமி நாயக்கம்பட்டி, உள்ளிட்ட 34 இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர் இளங்கோவன் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் R மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்கள் என்று அதிமுக நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பனிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்..
- தமிழக குரல் செய்தியாளர் V.நர்மிதா.
No comments:
Post a Comment