சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.பங்குனி மாதத்தில் முருக பக்தர்கள் தேர் இழுப்பது, காவடி எடுப்பது, பால் அபிஷேகம் செய்வது இந்த மாதத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
தொளசம்பட்டி முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் முத்துக்குமரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது வெள்ளி கவசத்தில் முத்துக்குமரன் திருவீதி உலாவாக வருகை புரிந்தனர். பக்தர்கள் அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கினர். இன்று திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பங்குனி உத்திரத் திருவிழாவை இன்றும் நாளையும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment