சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7 பெரியார் பல்கலைக்கழகத்தின் நினைவு பெற்றது. நேற்று 17/03/24 சனிக்கிழமை கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பட்டமேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் திருவள்ளுவன் மாண்பமை துணைவேந்தர் தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், மற்றும் முனைவர் சிதம்பரம் மேனாள் இயக்குனர் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி. இவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டது.
தேசிய மாணவர் படை மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்கப்பட்டனர். கல்லூரியில் உள்ள தமிழ் துறை,ஆங்கிலத்துறை, கணிதத்துறை, வணிகவியல் துறை, மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை போன்ற 25 க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள அனைத்து துறை மாணவர்களுக்கும் கலந்து அனைத்து துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கினார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் தலைமையில் பட்டமளிப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது
No comments:
Post a Comment