சேலம் அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி சேலம்-7 பெரியார் பல்கலைக்கழகத்துடன் இனைவு பெற்றது. இன்று 07/03/24 வியாழக்கிழமை கல்லூரி அரங்கில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் செண்பகலட்சுமி அம்மையார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாலச்சந்தர் சேலம் மாநகராட்சி ஆணையாளர் அவர்களை தேசிய மாணவர் படை வரவேற்றனர். இன்று அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த பாலச்சந்தர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி அம்மையார் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். பாலச்சந்தர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் அவர்கள் மாணவர்களிடம் உரையாடினார். கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறையிலும் பயின்று செமஸ்டர் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பணியாற்றி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்கள் ஆண்டு விழா நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
No comments:
Post a Comment