சேலம் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 7 March 2024

சேலம் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா.


அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7 பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது. நேற்று அரசு கலை கல்லூரியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக முருகானந்தம் வருமானவரித்துறை ஆய்வாளர் மற்றும் சர்வதேச கபடி விளையாட்டு வீரர் அவர்களை சிறப்புரை ஆற்றினார்.

மாணவ மாணவிகள் அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு துறையில் ஓட்டப்பந்தயம், குண்டறிதல், ஈட்டி எறிதல், தடகளப்போட்டி, கபடி, கோகோ போன்ற போட்டிகளில் பல்வேறு துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட வருமானவரித்துறை ஆய்வாளர் முருகானந்தம் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு பரிசுகள் வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad