சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் திருவிழாவையொட்டி கம்பம் நடப்பட்டு தொடர்ந்து 15 நாட்களுக்கு பக்தர்கள் தினம் பெறும் தண்ணீர் ஊற்று வழிபாடு செய்தனர் மாரியம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
பக்தர்கள் பொதுமக்களுக்கு கூல் பொங்கல் போன்ற பிரசாதங்களை வழங்கப்பட்டன.05/03/24 திங்கட்கிழமை மாலை சத்தாபுரம் நிகழ்ச்சி வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 06/03/24 நேற்று செவ்வாய்க்கிழமை காலை மாரியம்மன் பண்டிகை நடைபெற்றது சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் நேற்று கடனை செலுத்தும் வகையில் பூமிதித்தனர் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. கோழி ஆடு வெட்டி நேற்றிகடன் செலுத்தினர். மாலை அக்னி கரகம் அலகு குத்தும் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment