சேலம் மாவட்டம் தொளசம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள துணை சுகாதார நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தொளசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விறுவிறுப்பாக போடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment