தாரமங்கலம் ஏப்.16
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பிஜேபி வேட்பாளர் கே பி ராமலிங்கத்தை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுவையில் கேபி ராமலிங்கத்தை குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.
அதிமுக திமுக ரெண்டு பேரும் துரோகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அது எனக்குத் தெரியும் அதை பேசுவதற்கு நேரம் பத்தாது அத சொன்னா ரெண்டு பேத்தையும் கல்லை தூக்கிட்டு அடிப்பீங்க. 57 ஆண்டு காலம் தமிழகத்தை திமுக அண்ணா திமுக என மாறி மாறி ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள் ஆட்சி செய்த நம்மை, தமிழக மக்களை முற்றிலும் ஏமாற்றி விட்டார்கள் தமிழ்நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கும் இரண்டு கட்சிகள் போதும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த கூட்டணியில் சேர்ந்து கொடுக்கிறோம் இந்த தேர்தலில் வெற்றி பெற்று. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசினார்..
No comments:
Post a Comment